கோயம்புத்தூர் - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் தொடக்கி வைத்தார்!
கோயம்புத்தூர் - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி ஸ்ரீனிவாசன், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் சின்ஹா மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள், ரயில்வே பயணிகள் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ரயிலில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி, சொகுசு இருக்கைகள், சுத்தமான கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் என பல்வேறு நவீன வசதிகளும் உள்ளது.
எட்டு பெட்டிகள் கொண்ட இந்த வந்தே பாரத் ரயில், வரும் 1 ஆம் தேதி முதல் காலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு, 11:30 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை அடைகிறது.
Advertisement
Advertisement
மறு வழித்தடத்தில் பிற்பகல் 1:40 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு, இரவு 8 மணி அளவில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரயில் வியாழக்கிழமை தவிர மற்ற அனைத்து நாள்களிலும் இயக்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.