முகப்பு
தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை: ஆக.1 முதல் மீண்டும் விண்ணப்பம் 

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜூலை 2023, 6:11 pm IST
கோப்புப்படம்
பகிர்:

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நியாய விலைக் கடைக்கும் தனித்தனியாக விற்பனையாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும், விண்ணப்பங்களில் குடும்ப அட்டை எண் தவறாமல் எழுதப்பட வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

மேலும், டோக்கன்களில் முகாம் நடைபெறும் நாள், நேரம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். ஒரு முகாமிற்கு ஒரு நாளைக்கு எத்தனை டோக்கன்கள் வழங்கப்பட்டது என்ற விவரங்களை சேகரிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் வேண்டாம் என மறுப்பு தெரிவிப்பவர்கள் விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என  தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட சார்பதிவாளர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.