அமித் ஷா நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு!
அமித் ஷா கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அமித் ஷா கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக இன்று(வெள்ளிக்கிழமை) மாலை தமிழகம் வருகிறார். அப்போது ராமேசுவரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தைத் அமைச்சா் அமித் ஷா கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறார்.
தொடர்ந்து நாளையும் தமிழ்நாட்டில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | அண்ணாமலை நடைப்பயணத்தில் தேமுதிக பங்கேற்பு!
இதையடுத்து அமித் ஷா கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் அமித் ஷா தமிழகம் வந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.