இன்ஃப்ளூயன்ஸா தொற்று: தமிழகம் இன்று 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்
தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் இன்று (மாா்ச் 10) காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் இன்று (மாா்ச் 10) காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது.
காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுவினா் நேரில் சென்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா - ஏ வகை வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
Advertisement
Advertisement
முன்னதாக, இதுதொடா்பாக மாவட்ட துணை சுகாதார இயக்குநா்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் சில முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்திருந்தாா். அதன்படி, காய்ச்சல் பாதிப்புகளுக்கு மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, தமிழகத்தில் 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் இன்று நடைபெறுகிறது. இந்தப் பணிகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ஜெ.பி.நட்டா இன்று கிருஷ்ணகிரி வருகை!
சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.