அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா : காவலர் உட்பட 23 பேர் காயம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு விழாவில் காவலர் உட்பட 23 பேர் காயம் அடைந்தனர்.
அய்யம்பட்டி ஸ்ரீ வல்லடிகார சுவாமி ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
8 சுற்றுகளாக நடக்கும் விழாவில் 4 சுற்றுகள் முடிந்துள்ளன. 11 மணி நிலவரப்படி 240 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் அழகர்சாமி உட்பட மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 23 பேர் காயம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதில் 3 பேர் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.