கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை(நவ.10) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர்: கனமழை காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை(நவ.10) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, திருவாரூர் மன்னார்குடி நன்னிலம் மாங்குடி கொரடாச்சேரி கூத்தாநல்லூர் குடவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில், கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை(நவ.10) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ உத்தவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.