அரசுப் பள்ளிக்கு படையெடுத்த பாம்புகளால் பரபரப்பு!
வாழப்பாடி அருகே அரசு பள்ளிக்கு படையெடுத்த பாம்புகளால் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாழப்பாடி அருகே அரசு பள்ளிக்கு படையெடுத்த பாம்புகளால் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இடிபாடுகள் அகற்றப்படாததால், அப்பகுதியில் பாம்புகள் புகுந்துள்ளன.
நேற்று திங்கள்கிழமை பள்ளிக்குள் கருஞ்சாரை பாம்பு ஒன்று பிடிபட்டது. இன்று செவ்வாய்க்கிழமை, 4 அடி நீளமுள்ள மஞ்சள் சாரை பாம்பு ஒன்று பள்ளிக்குள் சுற்றியது.
Advertisement
Advertisement
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த தகவலின் பேரில் பள்ளிக்கு விரைந்து சென்ற வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையிலான தீயணைப்பு படையினர், அந்த பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
பள்ளி வளாகத்தில் அடுத்தடுத்து பாம்புகளை கண்டதால் மாணவர்கள் அச்சமடைந்து அலறினர். இருப்பினும் இந்த பாம்புகள் விஷம் இல்லாதவை என்பதால், ஆசிரியர்களும், பெற்றோர்களும் நிம்மதி அடைந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.