கோடியக்கரை: இலங்கை மீனவர் 2 பேர் கைது
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வெள்ளிக்கிழமை (செப்.15) கரை சேர்ந்த இலங்கை மீனவர் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வெள்ளிக்கிழமை (செப்.15) கரை சேர்ந்த இலங்கை மீனவர் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த நிக்சன் டீலக்ஸ் (38), காயூஸ் சுமத்திரன்(36) ஆகிய இரண்டு மீனவர்கள் கோடியக்கரையில் கரை சேர்ந்தனர்.
இவர்களை கடலோர காவல்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
முதல்கட்ட விசாரணையில், கடலில் வேகமாக வீசிவரும் காற்றின் காரணமாக படகு திசை மாறியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.