நெல்லையில் இருசக்கர வாகன ஓட்டியைத் தாக்கிய திமுகவினர்!
நெல்லையில் இருசக்கர வாகன ஓட்டியைத் திமுகவினர் தாக்கியது பற்றி...
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து நெல்லை வண்ணாரப்பேட்டையில் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் அங்கு வந்த இருசக்கர வாகன ஓட்டியை திமுகவினர் தாக்கினர்.
தமிழக முதலமைச்சர் குறித்தும் பெண்களை இழிவாக பேசியதாகவும் கூறி தஞ்சாவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலைக்கு ஊர்வலமாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி - வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி - பாளையங்கோட்டை, திருநெல்வேலி - மதுரை ஆகிய மூன்று சாலைகளிலும் தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் நெல்லை மாநகர் பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளானது.
Advertisement
Advertisement
தமிழக முதலமைச்சரைக் கண்டித்து திமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பியவாறு சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலையின் ஓரமாக இருசக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டி ஒருவரை திமுகவினர் சரமாரியாக தாக்கி அவரது வாகனத்தை கீழே தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சரவணன் முன்னிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. உடனடியாக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு வாகன ஓட்டி அங்கு இருந்து மீட்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
தொடர்ந்து இருபது நிமிடங்களுக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் இருந்தவர்களை காவல்துறை துணை ஆணையாளர் சரவணன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
தாக்குதலுக்கு உண்டான இருசக்கர வாகன ஓட்டி கூறும் போது, பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் என தெரிவித்ததற்கு தன்னை தாக்கியதாக கூறிச் சென்றார்.
DMK members assaulted a two-wheeler rider in Nellai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.