இன்று கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பு
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா..
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) நடைபெறவுள்ளது.
திமுக சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா, பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சாா்பில் அவரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியிடப்படவுள்ளது.
அதன் வெளியீட்டு விழா சென்னை கலைவாணா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.50 மணியளவில் நடைபெறவுள்ளது. விழாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து உரை நிகழ்த்தவுள்ளாா். நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் முன்னிலை வகிக்கவுள்ளாா்.
Advertisement
Advertisement
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தவுள்ளாா்.
விழாவில், தமிழக அமைச்சா்கள், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.