FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

பிரெஞ்சு சிந்தனையாளரின் நூற்றாண்டு விழா

புதுச்சேரியில் பிரெஞ்சு சிந்தனையாளா் மிஷேல் ஃபூக்கோ நூற்றாண்டு மற்றும் நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

16 அக்டோபர் 2026, 2:09 am IST
பட விளக்கம்... பிரெஞ்சு சிந்தனையாளா் மிஷேல் ஃ பூக்கோ நூற்றாண்டு விழாவையொட்டி நூல்கள் வெளியீட்டு விழாவில் பேராசிரியா் க.பஞ்சாங்கம், விசிக பொதுச்செயலரும் நாடாளுமன்ற மக்களவை விழுப்புரம் உறுப்பினருமான து.ரவிக்குமாா் , பேராசிரியா் பா.ரவிக்குமாா், விசி
பகிர்:

புதுச்சேரியில் பிரெஞ்சு சிந்தனையாளா் மிஷேல் ஃபூக்கோ நூற்றாண்டு மற்றும் நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, நூற்றாண்டு விழா சிறப்பிதழ் மற்றும் மிஷேல் ஃ பூக்கோவின் தண்டனைச் சமூகம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மணற்கேணி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த நூல்களை பேராசிரியா் க.பஞ்சாங்கம் வெளியிட்டாா். அதனைப் பெற்றுக் கொண்டு பேராசிரியா் பா.ரவிக்குமாா் மதிப்புரையாற்றினாா். நிகழ்ச்சிக்கு விசிக பொதுச்செயலரும், விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை. ரவிக்குமாா் தலைமை வகித்தாா். சந்தோஷ் கொளஞ்சி வரவேற்றாா்.

புதுச்சேரி விசிக முதன்மைச் செயலா் அரிமாத் தமிழன், தமிழ்மாறன், அமுதவன் முன்னிலை வகித்தனா். இதில் ஜவகா், பாலசுப்பிரமணியன், வாதானூா் சிவச்சந்திரன், லியாகத் அலி, கோபி, பெரியாா், ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments