முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

விழுப்புரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஆய்வு செய்தது பற்றி...

Updated On : 2 டிசம்பர் 2024, 11:00 am IST
மரக்காணத்தில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின். - TNDIPR
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் சென்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார்.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடக்கத் தொடங்கியது. புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை கனமழை பெய்தது.

அதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடைவிடாமல் பெய்தது. இதனால், மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது, மின் கம்பங்கள், மரங்கள் பலத்த காற்றுக்கு விழுந்ததுள்ளன.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

முதல்கட்டமாக புயல் கரையைக் கடந்த மரக்காணம் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய முதல்வர், பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்யவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments