அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!
வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
சென்னை: வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, மூத்த நிா்வாகிகள் பங்கேற்றுள்ளனா். மேலும், கட்சித் தொண்டா்கள் 3,000 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் வானகரம் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்துக்கு வாகனங்களில் செல்வதால், சென்னை செண்ட்ரல் - பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெற்குன்றம் முதல் வானகரம் வரையிலும், காட்டுப்பாக்கம் முதல் வானகரம் வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து செல்கின்றன. இதனால் பிற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்
Advertisement
Advertisement
2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாக, செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்தில் முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. கூட்டணியை அமைப்பதற்கு கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அங்கீகாரம் அளிப்பது உள்பட பல்வேறு முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.