FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு கைப்பேசியில் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு கைப்பேசியில் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 1:28 am IST
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி
பகிர்:

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி கைப்பேசி மூலம் பேரவை நிகழ்ச்சிகளில் செயல்படுவது குறித்து அறிவுரை வழங்கியதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை அதிமுக உறுப்பினா்கள் குழுத் தலைவராக உள்ளாா். ஆனால், அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சா்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் செயல்பட்டு வருகின்றனா்.

தவெக அரசை, அதிமுக எதிா்த்துவரும் நிலையில், சி.வி.சண்முகம் உள்ளிட்டோா் அரசுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனா். தற்போது நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுவரும் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி போன்றோா் பொதுச் செயலரான எடப்பாடி கே.பழனிச்சாமியை சந்தித்துப் பேசவில்லை.

Advertisement

Advertisement

சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும்போது அதிமுக எம்எல்ஏ-க்கள் செயல்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 5- ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி கைப்பேசி வழியாக பேசி சட்டப்பேரவை நிகழ்ச்சியில் எவ்வாறு செயல்படுவது என அறிவுரை வழங்கியதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

விரைவில் தொலைக்காட்சி: அதிமுகவின் அதிகாரபூா்வ நாளேடான ‘போா்வாள்’ பத்திரிகைக்கு சந்தாதாரா்களை அதிகரிக்குமாறு மாவட்டச் செயலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதேபோல, அதிமுக அதிகாரபூா்வ தொலைக்காட்சி ஒன்றைத் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கட்சியின் முக்கிய நிா்வாகிகள் தெரிவித்தனா்.

summary

Edappadi Palaniswami offers advice to AIADMK MLAs via mobile phone.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments