மதுராந்தகம் இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமியின் பிரசார சுற்றுப்பயண விவரங்கள் வெளியீடு
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி எடப்பாடி பழனிசாமியின் பிரசார சுற்றுப்பயண விவரங்கள் வெளியாகியிருப்பது பற்றி...
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து 24, 26ஆம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார்.
மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி செப்.24ஆம் தேதி மாமண்டூர், பூதூர், தேவத்தூர், சரவம்பாக்கம் ஆகிய இடங்களிலும் செப்.26ஆம் தேதி எல். எண்டத்தூர், ராமாபுரம், எலப்பாக்கம், ஒரத்தி ஆகிய இடங்களிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வார் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் அக்.6-ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக கூட்டணி, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.
Advertisement
Advertisement
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம்(தனி) தொகுதியில் கணிதா சம்பத்தும் தாராபுரம் (தனி) தொகுதியில் பானுமதியும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டுமே அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள். எனவே, இந்த இரு தொகுதிகளிலும் வெற்றியை தக்கவைக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Edappadi Palaniswami will campaign in the Madurantakam Assembly constituency on the 24th and 26th in support of the AIADMK candidate.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.