முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 6 கோயில்களில் ரோப் கார் வசதி: அமைச்சர் சேகர்பாபு

தமிழகத்தில் மேலும் 6 கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

Updated On : 23 பிப்ரவரி 2024, 11:40 am IST
கோப்பிலிருந்து..
பகிர்:

தமிழகத்தில் மேலும் ஆறு கோயில்களில் மக்கள் எளிதாக சாமி தரிசனம் செய்ய ரோப்கார் அமைக்க சாத்தியக்கூறு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டில் இரு இடங்களில் ரோப்கார் அமைக்க 27 கோடி ஒதுக்கப்பட்டு விரைவில் பணி துவங்க உள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ள 108 திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் 20 கோடி மதிப்பீட்டில் முடிவுற்று திறக்கும் தருவாயில் உள்ள ரோப்கார் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மாநில இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து ரோப் கார் வெள்ளோட்டத்தில் பயணம் செய்து மலை மேல் உள்ள லட்சுமி நரசிம்மரை சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

Advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்துசமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, லட்சுமி நரசிம்மர் கோவில் இன்றைக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 20 கோடி மதிப்பீட்டில் விமான நிலையத்தில் உள்ள அமைப்புகளை போன்று மின் தூக்கி வசதி உட்கட்டமைப்பு வசதிகள் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இன்னும் சிறு சிறு பணிகள் உள்ளன. அதனை முழுமையாக முடிக்கப்பட்டு தமிழக முதல்வரால் ரோப்கார் பணி விரைவில் பக்தர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் இக்கோவிலில் அரசியல் ஆதாயத்திற்காக இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய பழனிசாமி பணிகள் முடிக்கப்படாமலேயே திறந்து வைத்ததாகக் கல்வெட்டு வைத்தனர் என விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் மேலும் ஆறு திருக்கோவில்களில் ரோப்கார் அமைக்க சாத்தியக் கூறுகள் உள்ளதாக ஆராயப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இரண்டு இடங்களில் ரோப்கார் பணி துவங்க 27 கோடி தமிழக முதல்வர் ஒதுக்கி இருப்பதாகவும் விரைவில் அப்பணி துவங்கும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments