புதுகை மாவட்ட வன அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையால் பரபரப்பு!
புதுகை மாவட்ட வன அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: புதுகை மாவட்ட வன அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வனத்துறை வாகன விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள பொருள்களை வெளியே எடுத்து நீதிமன்றப் பணியாளர்கள் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2014-ம் ஆண்டு வம்பன்பகுதியில் நடந்த விபத்தில் வனத்துறை வாகனம் மோதி இருவர் உயிரிழந்தனர். இதுகுறித்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி இழப்பீடு வழங்கப்படாத நிலையில் இந்த ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இன்றுமுதலே படிப்படியாக பேருந்துகள் நிறுத்தப்படும்!
இந்த நிலையில், வனத்துறையிருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.