FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மிக கனமழை: தமிழகத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளம், கர்நாடகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்.

Updated On : 17 ஜூலை 2024, 9:34 am IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

புதன்கிழமை காலை இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாளைமுதல் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து அடுத்த 7 நாள்களுக்கு தரைக்காற்றோடு கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கேரளம், கர்நாடக மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே சென்னை வானிலை மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 34 செ.மீ. மழையும், அப்பர்பவானியில் 21.7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments