முகப்பு
தமிழ்நாடு

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவு

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனத்தை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 6 ஜூன் 2024, 7:45 pm IST
கோப்புப்படம்
பகிர்:

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியாா் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்குரைஞா் என ஸ்டிக்கா் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்துக் காவல் துறை அண்மையில் அறிவித்தது.

இந்தத் தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி சென்னையைச் சோ்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்த வழக்கை இன்று(ஜூன் 6)விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அரசியல் கட்சினரின் வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கின் விரிவான உத்தரவு ஜூன் - 20-ல் வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.