முகப்பு
தமிழ்நாடு

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வதற்காக விவேகானந்தர் மண்டபம் சென்றடைந்துள்ளார்.

Updated On : 30 மே 2024, 11:54 pm IST
- படம் | பிடிஐ
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி தியானம் மேற்கொள்வதற்காக விவேகானந்தர் மண்டபம் சென்றடைந்துள்ளார்.

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு தியானத்துக்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றடைந்த பிரதமா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாலை 4.35 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடைந்துள்ளார்.

கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, ஹெலிகாப்டா் தளத்தில் இருந்து காா் மூலம் பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பகவதி அம்மன் கோயிலில், கோயில் நிர்வாகம் சார்பில், பகவதி அம்மன் புகைப்படம் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதனைத்தொடர்ந்து, படகு இல்லத்துக்கு சென்ற அவர், தனிப்படகில் விவேகானந்தா் மண்டபத்தை அடைந்தார்.

- படம் | பிடிஐ

விவேகானந்தர் தியான மண்டபத்தில் அமா்ந்து தியானத்தை தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி.

ஜூன் 1 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை தொடா்ந்து 45 மணி நேரம் தியானத்தில் இருப்பார் என்றும், தியானத்துக்காக மோடி 2 நாள் இரவு விவேகானந்தா் மண்டபத்தில் தங்குகிறாா் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

33 ஆண்டுகளுக்கு முன் விவேகானந்தர் மண்டபத்தில் பாஜக தலைவர் முரளி மனோஹர் ஜோஷியுடன் பிரதமர் மோடி - படம் | பிடிஐ

இதையொட்டி, தியான அரங்கில் புதிதாக குளிா்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. பிரதமா் தங்குவதற்காக அங்குள்ள அறை ஒன்றிலும் குளிா்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவேகானந்தா் மண்டபத்தில் சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினரும் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments