முகப்பு
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் கைது.

Updated On : 12 நவம்பர் 2024, 8:29 am IST
கோப்புப் படம்
பகிர்:

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் சென்ற படகை சிறைபிடித்துள்ளது இலங்கை கடற்படை.

பருத்தித்துறை கடற்பரப்பில் நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்தனர். மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களது விசைப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு மீனவர்களை படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments