முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

Updated On : 24 நவம்பர், 2024 at 8:35 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 24 நவம்பர், 2024 at 8:33 AM

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Updated On : 24 நவம்பர், 2024 at 8:43 AM

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Updated On : 24 நவம்பர், 2024 at 8:46 AM

புயல் சின்னம்

வங்கக் கடலில் சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது தமிழக கரையை நோக்கி நகர்வதால், திங்கள்கிழமை நவ. 25 முதல் நவ. 28-ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதனிடயே கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் முதல் குமரிக்கடல் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களி லும், புதுச்சேரிமற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) முதல் நவ. 29-ஆம் தேதி வரை மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... போராட்டங்களா? கொஞ்சம் பொறுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.