FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கடலூர், விழுப்புரம்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவ. 29 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 நவம்பர் 2024, 12:03 am IST
பகிர்:

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவ. 29 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றிரவு புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, நவ. 30 ஆம் தேதி காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவ.29 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments