FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்!

சென்னையில் அனைத்து வழித் தடங்களிலும் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு.

Updated On : 16 அக்டோபர் 2024, 8:28 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்ததால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரம் நோக்கிச் செல்வதால், நேற்றிரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்தது.

Advertisement

Advertisement

இதனால், பல்வேறு சாலைகளில் தேங்கியிருந்த மழை நீரும் வடிந்ததால், சாலைப் போக்குவரத்து சில இடங்களைத் தவிர மற்ற பகுதிகளில் சீரானது.

வழக்கம்போல் இயங்கும்

சென்னை மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களில் இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், சென்னை மெட்ரோ ரயில்கள் காலை 5 மணிமுதல் இரவு 11 மணிவரை அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம்போல் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments