பாஜகவின் 'பி' டீம்தான் விஜய்: பேரவைத் தலைவர் அப்பாவு
பாஜகவின் பி டீம்தான் விஜய் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பாஜகவின் பி டீம்தான் விஜய் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரஜினி அரசியலுக்கு வராததால் பாஜகதான் விஜய்யை இறக்கியிருக்கிறதோ என சந்தேகம் எழுகிறது. விஜய் மற்றவர்களை குறை சொல்லும்போது, தான் உண்மையாக இருக்க வேண்டும்.
வருமான வரி சோதனையில் சிக்கியபோது விஜய்க்கு ஆதரவாக திமுகதான் குரல் கொடுத்தது என்றார்.
முன்னதாக பாஜகவின் 'சி' டீம்தான் விஜய் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்திருந்த நிலையில் தற்போது அவரைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் அப்பாவும் விஜய்யை விமர்சித்திருக்கிறார்.
பாஜகவின் 'சி' டீம்தான் விஜய்: அமைச்சர் ரகுபதி
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வெற்றிக் கொள்கைத் திருவிழாவாக (கொள்கை பிரகடனம்) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் பேசிய விஜய், பிளவு அரசியல் செய்பவர்களும், திராவிட மாடல் என்கிற பெயரில் மக்கள்விரோத ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஊழல் சக்திகளும்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இரு எதிரிகள்' என்று கூறினார்.
அதேவேளையில் இந்த மண்ணின் இரு கண்களான திராவிடம், தமிழ் தேசியத்தை பிரித்துப் பார்க்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.