பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான்
பாஜகவின் கிளைதான் தவெக என சீமான் விமர்சித்தது குறித்து...
பாஜகவின் கிளை தவெக என விஜய் உண்மையைப் பேசியிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
தாராபுரம் தொகுதியில் நாதக வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து பிரசாரத்தில் சீமான் பேசியதாவது, "பிரசாரத்தில் நன்றாக நடிக்கிறார்கள். ஸ்டார்ட் கேமரா ஆக்சன் என்று சொன்னதும் அப்படி நடிக்கிறார்கள். தன்னையே மிஞ்சும் அளவுக்கு நடிப்பதாக விஜய் கூச்சப்படுகிறார்.
ரொம்ப நாள்களுக்குப் பிறகு விஜய் உண்மை பேசியுள்ளார். பாஜகவின் கிளையாக தவெக இருந்தது; இப்போது திமுகவின் கிளையாக மாறிக்கொண்டு வருவதாக அவர் கூறினார். இதை அவர் தெரியாமல் உளறவில்லை. உள்ளிருந்த உண்மை வெளிவந்துவிட்டது.
Advertisement
Advertisement
பிரசாரத்தில் 20 நிமிடங்களில் சுமார் 200 முறையாவது திமுக எனச் சொல்லியிருப்பார். திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என இன்னமும் கூறிக் கொண்டிருக்கிறார். அந்தக் கட்சிதான் போய்விட்டதே. ஆட்சிக்கு வந்தபிறகு, கொண்டுவந்த திட்டங்களையும் கொண்டு வரவிருக்கும் திட்டங்களையும்தான் பேச வேண்டும்.
நாம் முற்றும் முழுதாக வேறொரு நாட்டைப் படைக்க விரும்புகிறோம். இங்கு ஆளும் ஆட்சியும்தான் மாறியிருக்கிறது; ஆட்சிமுறை மாறவில்லை. ஆட்சிமுறையைத்தான் மாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் வாக்குக்கு காசு கொடுக்காமல் மூன்றாவது பெரிய கட்சியாக ஒரு கட்சி வளர்ந்திருக்கிறது என்றால், அது நாம் தமிழ கட்சி மட்டும்தான்.
பண அரசியலை ஒழிப்போம் என விஜய்யும் சொன்னார். ஆனால், இப்போது அதிகமாகக் கொடுப்பவர்களாக தவெகவினர்தான் உள்ளனர்.
மின்சாரம் இல்லை என்று கூறினால் - விசில் ஊதினால் வந்து விடும் என்கின்றனர். தண்ணீர் இல்லை எனக் கூறினால் - விசில் ஊதினால் வந்து விடும் என்கின்றனர்" என்று விமர்சித்தார்.
TVK is a branch of the BJP, says NTK Leader Seeman
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.