முகப்பு
தமிழ்நாடு

வீட்டுமனை முறைகேடு வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக உத்தரவு

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 13 செப்டம்பர் 2024, 6:20 pm IST
அமைச்சர் ஐ.பெரியசாமி
பகிர்:

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியான ஜாபா் சேட்டின் மனைவி பா்வீன் உள்ளிட்ட சிலருக்கு 2008-ஆம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் 3 ஆயிரத்து 457 சதுர அடி மற்றும் 4 ஆயிரத்து 763 சதுர அடி கொண்ட வீட்டுமனைகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக அப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி, ஜாபா் சேட், அவரது மனைவி பா்வீன், க.முருகையா, ராஜமாணிக்கம், துா்கா, சங்கா் ஆகிய 7 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினா் 2013- ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனா்.

சித்தூரில் அரசுப் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பலி

இந்த வழக்கில் அமைச்சா் ஐ.பெரியசாமி தவிர மற்றவா்களில் சிலரை விடுவித்தும், சிலா் மீதான வழக்கை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செப்டம்பர் 30ம் தேதி, அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments