முகப்பு
தமிழ்நாடு

ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அனுமதி.

Updated On : 17 செப்டம்பர் 2024, 9:07 am IST
ஒகேனக்கல் பிரதான அருவி - கோப்புப் படம்
பகிர்:

பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக குறைந்துள்ளதால், ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அனுமதி அளித்துள்ளார்.

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும் இரு மாநில காவிரி கரையோர வனப்பகுதிகளில் அவ்வப்போது பெய்த திடீர் மழையின் காரணமாக ஒகேனக்கல் நீர்வரத்து கடந்த இரண்டு தினங்களாக அதிகரித்து இருந்தது.

தற்போது கர்நாடக அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து திங்கள்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 12,000 கன அடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 8,000 கன அடியாக சரிந்துள்ளது. மேலும், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி, நீக்கி செவ்வாய்க்கிழமை முதல் அருவிகள் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளில் குளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளார்.

கர்நாடக அணைகளின் நீர் திறப்பு மற்றும் கரையோர வனப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தின் அளவுகளை கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.