ஸ்டாலின்-கமல்ஹாசன்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ம.நீ.ம. தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

ம.நீ.ம. தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பர் கமல்ஹாசன் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் - அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் 1,414 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 2,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், கட்சியின் தலைவராக கமல் ஹாசனை மீண்டும் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீப்ரியா தீர்மானத்தை முன்மொழிய, ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமதியின்றி கட்டுக்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கூட்டுறவு வணிக வளாக கடைகள் திறப்பு

அதிர்ஷ்டம் யாருக்கு இன்று: தினப்பலன்கள்!

இருவேறு விபத்துகளில் ரியல் எஸ்டேட் அதிபா் உள்பட 3 போ் உயிரிழப்பு

பால் வியாபாரி கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள்

SCROLL FOR NEXT