முகப்பு
தமிழ்நாடு

எங்கள் 'ஐசிஎஃப் மனிதனுக்கு' வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

காது கேளாதோருக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பை வென்ற ஐசிஎஃப்-இல் பணியாற்றி வரும் வீரர் பிருத்வி சேகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி 2024, 9:51 am IST
பகிர்:


காது கேளாதோருக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பை வென்ற ஐசிஎஃப்-இல் பணியாற்றி வரும் வீரர் பிருத்வி சேகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

முதல்வர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எங்கள் 'ஐசிஎஃப் சென்னை மனிதனுக்கு' வாழ்த்துகள்.

அனைத்துத் தடைகளையும் தாண்டி காது கேளாதோர் மற்றும் கேட்கும் திறனில் குறைபாடுடையோருக்கான பிரிவில் ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன்ஷிப் வென்றுள்ள சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை ஊழியரான பிருத்வி சேகர் அவர்களுக்கு எனது பாராட்டுகள்!

Advertisement

Advertisement

மீள்திறன், திறமை, மனவுறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் உங்கள் வெற்றியானது, சாதனையாளர்கள் சவால்களைத் தமக்கே உரிய பாணியில் எதிர்கொண்டு மேலெழும்புபவர்கள் என்பதற்குச் சான்றாகத் திகழ்ந்து மெய்யான ஊக்கமாக விளங்குகிறது. வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.