2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி: நடிகர் விஜய்
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள தெரிவித்திருப்பதாவது:
"வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.
Advertisement
Advertisement
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.
இதையும் படிக்க: அரசியல் ஏன்? நடிகர் விஜய் விளக்கம்
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.