சென்னை ஓ.எம்.ஆரில் கடும் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி!
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் நேற்று முதல் பரவலாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது. இந்த நிலையில், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஓ.எம்.ஆரில் 5 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் இன்று காலை முதலே பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பழைய மகாபலிபுரம் சாலை, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் முதல் துரைப்பாக்கம் சந்திப்பு வரை கடுமையான போக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை, பாதைகள் மாற்றம், மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.