FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 16 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 16 ஜூலை 2026, 11:02 am IST
பகிர்:
Updated On : 16 ஜூலை 2026, 11:02 am IST

பங்குச்சந்தை உயர்வு

பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-ம் நாளாக இன்று (ஜூலை 16) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.

Updated On : 16 ஜூலை 2026, 11:02 am IST

கரூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

கரூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், 9 மணிநேரத்துக்கும் மேலாக தீயணைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Updated On : 16 ஜூலை 2026, 11:02 am IST

ஆதவ் அர்ஜுனா - அன்புமணி

தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இணைந்து இன்று காலை பேட்மிண்டன் விளையாடினர்.

Advertisement

Advertisement

Updated On : 16 ஜூலை 2026, 11:02 am IST

8 மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 17) 8 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் 8 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஜூலை 2026, 11:02 am IST

அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

Updated On : 16 ஜூலை 2026, 11:02 am IST

சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் நீக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 16 ஜூலை 2026, 11:02 am IST

தங்கம் விலை குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூலை 16) சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.

Updated On : 16 ஜூலை 2026, 11:02 am IST

காய்ச்சல் மருந்துகளில் ஆல்கஹால்?

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் ஆல்கஹாலின் அளவு குறித்த குற்றச்சாட்டுக்கு தமிழக சுகாதாரத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 16 ஜூலை 2026, 11:02 am IST

பாஜகவோடு திமுக நாளையே கைகோக்கலாம்

பாஜகவோடு திமுக நாளையே கைகோக்கும் நிலை வரலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

Updated On : 16 ஜூலை 2026, 11:02 am IST

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடையாது

தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என காவிரிநீர் ஒழுங்குமுறைக் கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Updated On : 16 ஜூலை 2026, 11:02 am IST

தவெக ஊராட்சி மன்றத் தலைவா் கைது

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக தவெகவில் இருந்து நீக்கப்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் வீரா(எ) வீராசாமி கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments