தமிழகத்துக்கு காவிரி நீர் கிடையாது: கர்நாடகம்
தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பது குறித்து...
தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என காவிரிநீர் ஒழுங்குமுறைக் கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தில்லியில் உள்ள காவிரிநீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் காவிரிநீர் ஒழுங்குமுறைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த அதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.
இதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழகத்துக்கான காவிரிநீர் திறக்கப்பட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசின் அதிகாரிகள் கூறியதாவது, கர்நாடகத்தில் ஜூன் மாதத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், அணைகளில் தண்ணீர் வரத்தும் இல்லை.
ஜூலை மாதத்தில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்ததால், அணையில் குறைந்தளவிலேயே தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது.
மேலும், பருவமழை தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை; அணைகளிலும் நீர் சேமித்து வைக்கப்படவில்லை. கர்நாடகம் இதற்கு முன்பு காணாத மழைப் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது.
காவிரி படுகைகளில் கடுமையான பற்றாக்குறை நிலவி வருவதால், தமிழகத்துக்கு நீர் திறந்துவிட முடியாது என்று தெரிவித்தனர்.
இதனிடையே, காவிரி நீரைத் திறக்க வலியுறுத்தி கர்நாடக மாநில எல்லையை நோக்கி பேரணியில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமையில் (ஜூலை 15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
No Cauvery water for Tamil Nadu, says Karnataka govt
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.