FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள்! எந்தெந்த கல்லூரிகளில்?

தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 11 ஜூலை 2026, 2:13 pm IST
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்கள் 100 ஆக இருந்த நிலையில் 150 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கும் தமிழக அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதற்கு முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டன. இதையடுத்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது எம்பிபிஎஸ் இடங்கள் உயர்ந்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் இந்த கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்படி தமிழகத்தில் 36 கல்லூரிகளில் 5,150 இடங்கள் உள்ளன. 2026- 27 முதல் கூடுதல் இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

100 additional MBBS seats alloted for Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments