மேக்கேதாட்டு அணை: கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உதவும் - டி.கே. சிவகுமார்
மேக்கேதாட்டு அணையால் தமிழ்நாட்டுக்கு அதிகளவில் பலன் கிடைக்கும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியது பற்றி...
மேக்கேதாட்டு அணையால் தமிழ்நாட்டுக்கு அதிகளவில் பலன் கிடைக்கும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியதாவது, மேக்கேதாட்டு திட்டம் என் இதயத்துக்கு மிக நெருக்கமானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் முக்கியமானது.
கர்நாடகாவை விட மேகேதாட்டு அணை திட்டம் தமிழகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது, உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி தண்ணீரை வெளியிட நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ஏனெனில், உச்சநீதிமன்றம் கூறியுள்ள 177.25 டிஎம்சி தண்ணீரை வெளியிட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
Advertisement
Advertisement
இந்தத் திட்டத்திலிருந்து ஒரு டிஎம்சி தண்ணீரைக்கூட பாசனத்துக்கு பயன்படுத்த முடியாது. அதன் முதன்மையான நோக்கம் குடிநீருக்காக வழங்குவதே. ஒரு வாளி தண்ணீரைக்கூட பாசனத்துக்குப் பயன்படுத்த முடியாது.
குறிப்பாக, பெங்களூரின் மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வருகிறது. கிருஷ்ணா நதியிலிருந்து நாம் தண்ணீர் கொண்டுவர முடியாது. காவிரி மட்டுமே நமது ஒரே ஆதாரம்.
இந்த நீர்த்தேக்கத்தால், நாம் தண்ணீரை மிகவும் திறம்படச் சேமித்து நிர்வகிக்க முடியும்.
தமிழ்நாட்டில் மேக்கேதாட்டு விவகாரத்தை ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே கொண்டுள்ளனர். கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக அவர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த அரசியலில் நான் தலையிட விரும்பவில்லை.
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நீதிமன்றம் ஒரு வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்கு அதிகளவில் உதவும் திட்டமாகும் என்று தெரிவித்தார்.
Mekedatu dam project is more useful to Tamil Nadu than Karnataka, says Chief Minister DK Shivakumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.