வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்
வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பல்வேறு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்து இருந்தன.
போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்து இருந்தன.
Advertisement
Advertisement
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதையும் படிக்க: 7 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு!
இந்த நிலையில், அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், "தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டாலும் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்து தரப்படும்" என்று தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.