ராமருக்கு பிடித்த மாட்டுக்கறி பிரியாணி: திமுக நிர்வாகியின் முகநூல் பதிவால் சர்ச்சை!
அயோத்தி ராமருக்கு பிடித்த மாட்டக்கறி பிரியாணி என முகநூலில் பதிவு செய்த திமுக பிரமுகரின் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அயோத்தி ராமருக்கு பிடித்த மாட்டக்கறி பிரியாணி என முகநூலில் பதிவு செய்த திமுக பிரமுகரின் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தர பிரதேசத்தின், அயோத்தியில் நேற்று ராமர் சிலை பிரதிஷ்டை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள், சாதுக்கள் கலந்து கொண்டனர். இதனிடையே தமிழகத்தில் திமுக மற்றும் பாஜகவினருக்கு மோதல் முற்றி வருகிறது.
இந்நிலையில், திமுக சட்ட சீர்திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் அவரது முகநூலில் ராமருக்கு பிடித்தது மாட்டுக்கறி பிரியாணி எனப் பதிவு செய்திருந்தது பொள்ளாச்சி நகர பாஜகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாஜக நகரத் தலைவர் பரமகுரு தலைமையில் தென்றல் செல்வராஜ் வீட்டை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
இதனிடையே தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறன் மற்றும் பாஜகவினருக்கு கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பாஜகவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமருக்கு மாட்டுக்கறி பிரியாணி என்ற முகநூல் பதிவால் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.