முகப்பு
தமிழ்நாடு

இந்து அல்லாதோர் பழநி கோயிலுக்குள் நுழையத் தடை: உயர்நீதிமன்றம்

இந்து அல்லாதவர்கள் பழனி முருகன் கோயிலுக்குள் செல்ல கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி 2024, 1:05 pm IST
இந்து அல்லாதோருக்குப் பழனி கோயிலுக்குள் நுழையத் தடை
பகிர்:

இந்து அல்லாதவர்கள் பழனி முருகன் கோயிலுக்குள் செல்ல கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது, மாற்று மதத்தை சார்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் தனி பதிவேடு வைக்க வேண்டும். 

Advertisement

Advertisement

மேலும், கடவுள் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எடுத்த பின் கோயிலுக்குள் செல்லலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் மத வெறியாட்டம் தொடங்கிவிட்டதாகக் கருதுகிறேன். அனைத்து கோயிலுக்கும் வெளிநாட்டிலிருந்து கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர் வருகின்றனர் என ஆன்மிக சொற்பொழிவாளர் கலையரசி நடராஜன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.