அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை பற்றி...
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் 3 நாள்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.
அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் மகன் அருண் நேரு பங்குதாரர்களாக உள்ள கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக அமலாக்கத்துறையினர் கடந்த 7 ஆம் தேதி சோதனையைத் தொடங்கினர்.
சென்னை, திருச்சியில் அமைச்சர் நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன், மகன் அருண் நேரு உள்ளிட்டோருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.
Advertisement
Advertisement
இதில், ரவிச்சந்திரனை மட்டும் அழைத்துச் சென்ற அமலாக்கத்துறையினர் அவரிடம் 5 மணிநேரத்துக்கு மேலாக செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.
அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் சோதனையில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்ட நிலையில், நேற்று மாலையும் ரவிச்சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், 72 மணிநேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் ரவிச்சந்திரனிடம் தொடர் விசாரணையில் ஈடுபட அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.