FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குரூப் 1 தேர்வு: இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியானது!

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது தொடர்பாக...

Updated On : 22 ஏப்ரல் 2025, 2:57 pm IST
கோப்புப்படம்
பகிர்:

குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.

துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பணியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன.

அந்த வகையில், 2024- ஆம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு அறிவிக்கை கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

Advertisement

Advertisement

துணை ஆட்சியா் 16, காவல் துணைக் கண்காணிப்பாளா் 23, வணிகவரி உதவி ஆணையா் 14, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளா் 21, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி பணியிடங்கள் தலா 1 ஆகிய 90 காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூலை 13-இல் நடைபெற்றது.

இந்தத் தோ்வில் தேர்ச்சி பெற்றோருக்கு கடந்த டிச. 10 முதல் டிச. 13-ஆம் தேதி வரை முதன்மைத் தோ்வு நடைபெற்றது.

முதன்மைத் தேர்வில் தேர்வானவர்களுக்கு கடந்த ஏப். 7 ஆம் தேதி முதல் ஏப். 9 ஆம் வரை நேர்காணல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது.

இந்த நிலையில், குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: கோடை விடுமுறை: தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்!

இறுதி தரவரிசைப் பட்டியலை https://www.tnpsc.gov.in/document/Oraltestmarks/RL_G1_04_2024.pdf என்ற லிங்க்கை பயன்படுத்தி தெரிந்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments