FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக மாநாட்டில் குவிந்த 2 லட்சம் பேர்! விஜய் சொல்லைக் கேட்காத தொண்டர்கள்?

தவெக மாநாடு நடைபெறும் இடத்தில் இப்போதே 2 லட்சம் பேர் திரண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 21 ஆகஸ்ட் 2025, 1:36 pm IST
மதுரை பாரபத்தியில் தவெக மாநாட்டு மேடை
பகிர்:

தவெக மாநாடு நடைபெறும் மதுரை பாரபத்தியில் கடும் வெயில் தகிப்பதால் தொண்டர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இப்போதே சுமார் 2 லட்சம் பேர் குவிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் காலையிலேயே மாநாட்டுக்கு வந்திருந்த பல தொண்டர்களும் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்திருந்ததைக் காண முடிந்தது. குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயிலில் அழுதுகொண்டே இருந்தன.

ஏற்கனவே, மாநாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பி விட்டதால், சாலையிலேயே வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டால்தான், மேற்கொண்டு வாகனங்கள் முன்னேறும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

தொண்டர்கள் மீது டிரோன்கள் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியும் நடந்தது. ஆனால், கொளுத்தும் வெயிலில் தெளிக்கும் தண்ணீர் ஆவியாகிப் போனது.

நாலாபுறமும் இருந்து வரும் தொண்டர்களுக்கு இடமளித்து அமர வைக்கவும், வெய்யிலால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவ முகாம்களுக்கு அழைத்துச் செல்லவும் குடிநீர் கிடைக்காமல் ஆத்திரமடைபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாவலர்கள் தவிப்பதாகவும் தெரிகிறது.

காலையில் இருந்தே ஏராளமானோர் மாநாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து, முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளனர்.

மாநாட்டுத் திடலுக்கு அருகே அவசர மருத்துவ வாகன சேவைக்கான சைரன் விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தொண்டர்கள் அமர மண் தரையில் விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்புகளை கிழித்து தற்காலிக கூடாரம் அமைத்து தொண்டர்கள் தஞ்சமடைந்தனர். நாற்காலிகளை தலைக்கு மேல் குப்புறக் கவிழ்த்துக்கொண்டு குடையாக பிடித்துக் கொண்ட தொண்டர்களையும் பார்க்க முடிகிறது.

மாநாடு நடைபெறும் திடலில், பிரமாண்ட மேடை, நடந்து வந்து விஜய் தொண்டா்களை சந்திக்கும் வகையில் நீண்ட நடைமேடை, தொண்டா்கள் அமருவதற்கான நாற்காலிகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், கடும் வெப்பம் தகிப்பதால், தொண்டர்கள் அமர முடியாமல் உள்ளது.

மேலும், விஜய் மாநாட்டுக்குள் வரும்போது, தொண்டர்கள் இரும்பு வேலி மீது ஏறி உள்ளே குதித்து விடக் கூடாது என்பதால், முன்னெச்சரிக்கையாக, இரும்பு வேலிகளுக்கு க்ரீஸ் பூசுப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், தவெக மாநாட்டுக்கு இளைஞர்கள் வந்துகொண்டிருப்பதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தவெக மாநாடு இன்று காலை தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால், சுமாா் 506 ஏக்கா் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments