முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டிருப்பது பற்றி...
செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு அதிகரிப்பு :
செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து, ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவ மழையால் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால், சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரங்களுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. இதனையடுத்து, ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவு விநாடிக்கு 250 கன அடியாக இருந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை(டிச. 16) மாலை 4 மணியிலிருந்து ஏரியிலிருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
சென்னையைப் பொறுத்தவரையில் இன்று நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Chembarambakkam lake surplus water release increased
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.