புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...
தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) மேலும் சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த டிச. 15 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய நிலையில் பின்னர் சற்று குறைந்தது.
அதன்பின் டிச. 22, திங்கள்கிழமை மீண்டும் தங்கம் விலை ஒரு லட்சத்தைக் கடந்தது. அதுமுதலே நாள்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தில் இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் இன்று(வியாழக்கிழமை) சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 12,820 -க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 245 - க்கும், கிலோவுக்கு ரூ. 1,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,45,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நாடுகள் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்து வருவதனால் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Chennai gold and silver rate today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.