FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குற்றங்களைப் பதிவு செய்ய மறுக்கிறது காவல் துறை: அண்ணாமலை

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்றார் அண்ணாமலை.

Updated On : 2 ஜனவரி 2025, 6:10 pm IST
செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை - படம் | யூடியூப்
பகிர்:

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசியதாவது,

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

குற்றங்கள் அதிகமாக நடப்பது தெரியக்கூடாது என்பதற்காக குற்றங்களைப் பதிவு செய்ய காவல் துறை அனுமதி மறுக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டித்து அனுப்புகிறது காவல் துறை.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக, மதுரையில் நாளை திட்டமிட்டபடி பாஜக மகளிரணி பேரணியைத் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகள் அமைப்பு புதிய தலைவரை நியமித்துள்ளது. அவர் நடத்தும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்கிறார்.

10 ஆயிரம் சிதிலமடைந்த பள்ளிகளை சீரமைப்போம் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. எத்தனை பள்ளிகளை சீரமைத்துள்ளனர் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

எனது சாட்டை அடி போராட்டம் புரிய வேண்டியவர்களுக்கு புரியும். எனக்கும் பெண் குழந்தை உள்ளது. தமிழகத்தில் சிஸ்டம் தோல்வி அடைந்துள்ளது. அது சரியாகும் வரை சாட்டை அடி போராட்டத்தை விடப்போவதில்லை.

செருப்பு இல்லாமல் நடக்கும்போதுதான் தெரிகிறது தமிழகத்தில் சாலைகள் சுத்தமாக இல்லை என. திமுக ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்.

வைகோவால் செய்ய முடியாததை பாஜக செய்யும். இதனை முழு ஆரோக்கியத்துடன் வைகோ பார்ப்பார் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments