சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, நாகை மற்றும் புதுச்சேரி - காரைக்காலிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு இலங்கை கடல் மற்றும் அதையட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 15-ஆம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 16, 17 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 18-ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | தமிழகத்தில் போகி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.