முகப்பு
தமிழ்நாடு

போராட்டங்களுக்கு அனுமதி: சட்டத் திருத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் போராட்டங்களுக்கு அனுமதி கோரும் அவகாசம் தொடர்பாக சட்டத் திருத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Updated On : 31 ஜனவரி 2025, 12:53 pm IST
உயர் நீதிமன்றம்
பகிர்:

தமிழகத்தில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதிக் கோரி விண்ணப்பிக்கும் காலஅவகாசத்தை 5 நாள்களில் இருந்து 10 நாள்களாக நீட்டித்து சட்டத் திருத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுபோல, போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் காவல்துறை முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தும்படி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில், புதிய தமிழகம் கட்சி சார்பில் பேரணி நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கடைசி நேரத்தில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு புதிய தமிழகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும் புதிய தமிழகம் கட்சி மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முன்கூட்டியே அனுமதி கோரி புதிய தமிழகம் மனு கொடுத்திருந்த நிலையில், நவம்பர் 6ஆம் தேதி அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இதனால் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், தென்மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் சென்னை வந்திருந்ததாகவும் மனுவில் கூறியிருந்தது.

இதனை ஏற்ற நீதிமன்றம், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை 5 நாள்களிலிருந்து 10 நாள்களாக அதிகரித்து சட்டத்திருத்தம் செய்ய வேண்டும், என்றும், அனுமதி கோரும் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற காவல்துறை, விண்ணப்பங்கள் மீது ஆலோசித்து, 48 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததால் ரூ.1 கோடி கேட்டு கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக புதிய தமிழகம் கட்சி மீது தொடரப்பட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments