முகப்பு
தமிழ்நாடு

ரிதன்யா தற்கொலை: மாமியார் கைது! ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியார் கைது...

Updated On : 4 ஜூலை 2025, 1:29 pm IST
மாமியாருடன் ரிதன்யா
பகிர்:

அவிநாசியைச் சேர்ந்த புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது மாமியார் சித்ரா தேவி இன்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் திருமணமாகி இரண்டரை மாதங்களில் புதுமணப்பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சிணை கேட்டும், உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும் இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ரிதன்யா அனுப்பிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ரிதன்யாவின் தற்கொலை மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை போலீஸார் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்துள்ளனர். மாமியார் சித்ரா தேவி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரை கண்காணிப்பில் போலீசார் விடுவித்தனர்.

இந்நிலையில் சித்ரா தேவியை சேவூர் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கவின்குமார், ஈஸ்வர மூர்த்தி, சித்ரா தேவி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் இன்று திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மூவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று ரிதன்யாவின் தந்தை இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

விசாரணையில், ஜாமீன் கோரிய மூவரும் பதிலளிக்க கால அவகாசம் கோரியதால் அதனை ஏற்று வழக்கு வருகிற திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

summary

rithanyas mother-in-law Chitra Devi was arrested in connection with tiruppur newlywed rithanya suicide case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.