வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!
காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை பற்றி...
சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து குழந்தைகள் நல அலுவலர் இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தார்.
காப்பக உரிமையாளரின் ஓட்டுநர் பழனி என்பவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்பட்டுள்ள நிலையில், காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் ப்ரியா, கார் ஓட்டுநர் பழனி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
18 girls being sexually abused at a child care center near Vandalur, Chennai. Three arrested in this case.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.