திருச்சியில் கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30-ஆம் ஆண்டு சந்திப்பு!
திருச்சியிலுள்ள கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு பற்றி...
திருச்சியிலுள்ள கேம்பியன் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
திருச்சியிலுள்ள கேம்பியன் மேல்நிலைப் பள்ளியில் 1995 ஆம் ஆண்டில் பயின்ற 90 மாணவர்கள், 30-வது ஆண்டில் சந்தித்தனர்.
திருச்சியில் ஜூலை 26 ஆம் தேதி இந்த சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில் இவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் கடந்த கால நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டதுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
Advertisement
Advertisement
மேலும், தாங்கள் படித்த பள்ளிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ. 1 லட்சம் நன்கொடையை கேம்பியன் பள்ளியின் முதல்வர் ஜேம்ஸ் பால்ராஜிடம் வழங்கினர்.
மேலும் தாங்கள் படித்த பள்ளிக்கும் நேரடியாகச் சென்று தங்களுடைய பள்ளி கால நினைவுகளை நினைவு கூர்ந்து நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டனர். இந்தச் சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாக அவர்கள் கூறினர்.
Alumni of the Campion School Class of 1995 gathered in Trichy to celebrate their 30th Pearl Reunion
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.